கோவையில் பிரதமர் மோடி பேசிகொண்டிருக்கும் போது அரங்கில் இருந்த இரண்டு சிறுமிகள் தங்கள் கைகளில் பதாகை எந்தியாவறு இருந்தனர். அதில், "தான் பட்டம் பெறும்போது இந்தியா 2வது பொருளாதார வல்லரசாக மாறியிருக்கும். நான் ஓய்வு பெறும் போது உலகின் NO.1 பொருளாதார நாடாக இந்தியா இருக்கும். உங்களது தொலைநோக்குப் பார்வைக்கு நன்றி என எழுதப்பட்டிருந்தது. இதை கவனித்த பிரதமர் அவர்களுக்கு வாழ்த்து கூறியதுடன் தனது பாதுகாவலர்களிடம் அதை வாங்கி வர சென்னார்.