நீண்ட நாட்கள் கடந்தும், பணம் கொடுத்தவர்களுக்கு வீடும் கிடைக்கவில்லை, அரசு வேலையும் கிடைக்கவில்லை. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அவரிடம் தொடர்ந்து கேட்டுவந்ததால், திடீரென தம்பிதுரை தலைமறைவானார். இந்த முறைகேடு தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் கோவை, குனியமுத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்நிலையில் நேற்று (பிப்ரவரி 12) தம்பிதுரை தைப்பூச திருவிழாவிற்காக வீட்டிற்கு வந்ததை அறிந்த பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அவரது வீட்டை முற்றுகையிட்டனர். நிலமை மோசமாவதை உணர்ந்த குனியமுத்தூர் காவல்துறையினர் தம்பிதுரையை வீட்டில் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.