கோவை: தீயணைப்பு டிஜிபி 5 மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை டிஜிபி சீமா அகர்வால் கோவை ரயில் நிலையப் பகுதியில் உள்ள தெற்கு தீயணைப்புத் துறை அலுவலகத்தில் மேற்கு மண்டல தீயணைப்புத் துறை அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை மேற்கொண்டார். இதில் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, திண்டுக்கல் ஆகிய ஐந்து மண்டல தீயணைப்புத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

தீயணைப்புத் துறை அலுவலகங்களில் உள்ள பாதுகாப்பு உபகரணங்கள் குறித்தும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி வீரர்கள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் தீயணைப்புத் துறை அதிகாரிகளிடம் தேவைகளையும் கேட்டறிந்தார். பின்னர் தீயணைப்பு உபகரணங்கள் குறித்து நேரில் ஆய்வு செய்தார்.

தொடர்புடைய செய்தி