ஈரோட்டில் இளம்பெண் கொலை வழக்கில் தன்னை சிக்க வைக்க முயற்சி நடப்பதாக சமூக ஆர்வலர் வீரக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த 25 ஆண்டுகளாக பட்டியலின மக்களுக்காகப் பணியாற்றி வரும் வீரக்குமாரை, ஒரு வாரமாக காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து கோவை மேற்கு மண்டல காவல்துறை துணைத் தலைவரிடம் புகார் மனு அளித்துள்ள அவர், சம்பந்தப்பட்ட காவல் அதிகாரி மீது நடவடிக்கை எடுத்து நியாயமான விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரியுள்ளார். இறந்த இளம்பெண் தனக்கு சிகிச்சைக்காக உதவி கேட்டதாகவும், தனது விசிட்டிங் கார்டை வைத்து தன்னை வழக்கில் தொடர்புபடுத்த முயற்சிப்பதாகவும் வீரக்குமார் தெரிவித்துள்ளார்.