பின்னர், பைக்கில் வந்த சுற்றுலாப் பயணிகளை எச்சரித்து அனுப்பினர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், "வால்பாறை - அதிரப்பள்ளி சாலையில் யானைகள் அதிக அளவில் நடமாடுகின்றன. யானைகளுக்கு இடையூறு ஏற்படுத்துவோர் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரித்தனர். சுற்றுலாப் பயணிகள் வனவிலங்குகளுடன் பழகும்போது எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும், வனவிலங்குகளின் இயற்கையான வாழ்விடத்தை தொந்தரவு செய்யக்கூடாது என்றும் வனத்துறை இன்று அறிவுறுத்தியுள்ளது.
உதகமண்டலம்
ஊட்டி: உறைபனி - சுற்றுலா பயணிகள் குதூகலம்