தொடர் மழையால் அக்டோபர் 22ஆம் தேதி முதல் தடை செய்யப்பட்டிருந்த கோவை குற்றாலம், மழைப்பொழிவு குறைந்ததையடுத்து இன்று முதல் மீண்டும் திறக்கப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழையால் அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக குளிக்க அனுமதி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருந்தது. தற்போது நீர்வரத்து குறைந்ததால், 15 நாட்களுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகள் மீண்டும் கோவை குற்றால அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்படுவதாக போளுவாம்பட்டி வனத் துறையினர் தெரிவித்துள்ளனர்.