கோவை: சிறுவாணி அணையில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சியின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் நேற்று நேரில் ஆய்வு செய்தார். தற்போது அணையின் நீர்மட்டம் 38.9 அடியாக உள்ளது. தினமும் 100 மில்லியன் லிட்டர் தண்ணீர் கோவைக்கு வழங்கப்படுகிறது. 

நீர்வரத்து, வெளியேற்றம், மற்றும் சுரங்கப்பாதை உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்த ஆணையர், நடைபெறும் புனரமைப்புப் பணிகளை விரைவில் முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு வழங்கினார். நீர் கசிவு தடுப்பு தொடர்பாக கேரளா, தமிழ்நாடு நீர்வளத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனையும் நடைபெற்றது. உதவி ஆட்சியர் பிரசாந்த், பொறியாளர் விஜயகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி