மத்திய அரசின் என். டி. பி. சி. நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் புதிதாக 11 நவீன அங்கன்வாடி மையங்கள் கட்டப்பட உள்ளன. இதற்கான கட்டுமானப் பணிகளைத் தொடங்கும் பூமி பூஜை நிகழ்ச்சியில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் எம். எல். ஏ. கலந்து கொண்டார். இந்நிகழ்வில், அதிமுக கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன், மற்றும் என். டி. பி. சி. யின் முன்னாள் அதிகாரி சங்கீதா வாரியார் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த அங்கன்வாடி மையங்கள் குழந்தைகளின் ஆரம்பக் கல்வி, ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரத் தேவைகள் பூர்த்தி செய்யும் வகையில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட உள்ளன. இதன் மூலம் மகளிர் மற்றும் குழந்தைகளின் வாழ்க்கைத் தரம் மேம்படும் என்று தெரிவிக்கப்பட்டது.