காலை 5. 30 மணிக்கு 10 கி. மீ. ஓட்டம் தொடங்கியது. இதில், தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
நேரு விளையாட்டு மைதானத்தில் தொடங்கிய மாரத்தான் ஓட்டம், அவிநாசி சாலை, பந்தய சாலை, பாலசுந்தரம் சாலை, ஏ. டி. டி. காலனி வழியாக மீண்டும் நேரு விளையாட்டு மைதானத்தை வந்தடைந்தது.
ரன் ஃபார் கேன்சர் மாரத்தான் போட்டியில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்களும், முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு பதக்கங்களும், பரிசுத் தொகையும் வழங்கப்பட்டன.
இரண்டாவது ஆண்டாக நடைபெறும் இந்த மாரத்தான் போட்டியில் ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்றதாகவும், பொதுமக்கள் மத்தியில் கேன்சர் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளதாகவும், போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.