உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் பிப்ரவரி மாதம் முழுவதும் சமூக வலைதளங்கள் மூலம் புற்றுநோய் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெறுகிறது. இதன் தொடக்கத்தை கோவை சரக டிஐஜி சசி மோகன் நேற்று மருத்துவமனை வளாகத்தில் தொடங்கி வைத்தார். இந்த பிரச்சாரத்தில் 14 வகையான புற்றுநோய்கள், அவற்றின் அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. தவறான தகவல்களைத் தடுக்கும் வகையில் மருத்துவர்கள் நேரடியாக தகவல் வழங்க உள்ளனர். மேலும், இம்மாதம் முழுவதும் புரோஸ்டேட் புற்றுநோய் தொடர்பான இலவச பரிசோதனை முகாமும் நடத்தப்படுகிறது.