கோவை: சி.ஆர. பி.எஃப். பயிற்சி நிறைவு விழா

கோவை துடியலூர் அருகே உள்ள ராக்கிபாளையம் சி.ஆர்.பி.எஃப். மத்திய ரிசர்வ் போலீஸ் பயிற்சி கல்லூரியில் 97வது சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 12 பெண்கள் உட்பட 366 வீரர்களின் 48 வார பயிற்சி நிறைவு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் ஐ.ஜிஜி. லாங்சின்குப் சிறப்பு விருந்தினராக பங்கேற்று அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, சிறந்த வீரர்களுக்கு விருதுகளை வழங்கினார். 

தொடர்ந்து வீரர்களின் யோகா மற்றும் மல்லர்கம்பம் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பயிற்சி முடித்த சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜம்மு காஷ்மீர், சத்தீஸ்கர் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பணியமர்த்தப்படவுள்ளனர். விழாவில் உயர் அதிகாரிகள், வீரர்களின் குடும்பத்தினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி