கோவை: குண்டுவெடிப்பு தினம் – ட்ரோன்கள் பறக்க தடை

கோவை நகரில் 1998 பிப்ரவரி 14ஆம் தேதி நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு தினத்தை முன்னிட்டு இன்று பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்நிகழ்வில் 58 பேர் உயிரிழந்து, 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இன்று நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட உள்ளதால், மாநகர காவல் ஆணையர் கண்ணன் தலைமையில் 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், கோவில்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் முக்கிய பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆர். எஸ். புரம் பகுதியில் இந்து அமைப்புகள் சார்பில் உயிரிழந்தோருக்கு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மேலும், குண்டுவெடிப்பு தினம் மற்றும் மகா சிவராத்திரி முன்னிட்டு வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ரேட் ஜோனாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் தடையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை எச்சரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி