அதன்பின்னர், அவர் ஆட்டோவிலேயே அமர்ந்திருந்தார். சிறிது நேரம் கழித்து பயணிகள் திரும்பி வந்து பார்த்தபோது, செல்வராஜ் மயங்கிய நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, செல்வராஜ் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். செல்வராஜின் திடீர் மரணம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.