இது தொடர்பாக கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கு. ராமகிருஷ்ணன் தலைமையில் கம்யூனிஸ்டுகள், தலித் அமைப்பினர் மற்றும் அம்பேத்கரிய அமைப்பினர் உள்ளிட்ட 20 - க்கும் மேற்பட்ட அமைப்புகளின் நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டனர். இந்த ஆலோசனையின் முடிவில் தமிழ்நாட்டை புறக்கணிக்கும் மத்திய அரசை கண்டிக்கும் வகையிலும், இந்தி திணிப்பை எதிர்க்கும் வகையிலும் கோவை வரும் மத்திய அமைச்சர் அமித்ஷாவிற்கு கருப்புக்கொடி காட்டுவது என முடிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக நேற்று பேசிய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு. ராமகிருஷ்ணன் 20 க்கும் மேற்பட்ட அமைப்பினர் பிப்ரவரி 27ஆம் தேதி கோவை கோவை விமான நிலையத்தில் இந்த கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும், தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மத்திய அரசுக்கு உரிய எதிர்ப்பினை பதிவு செய்யும் வகையிலும் இந்த போராட்டம் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்தார்.