கோவை மாநகராட்சியில் உள்ள 84 மற்றும் 86வது வார்டுகளை தி.மு.க புறக்கணிப்பதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. அன்புநகர், ரோஸ் கார்டன் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சேவைகள் குறைவாக இருப்பதாகக் கூறி, 50-க்கும் மேற்பட்டவர்கள் மாநகராட்சி அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். பாதாள சாக்கடை, சாலை வசதி, தெருநாய் தொல்லை மற்றும் குப்பைக் கிடங்கு காரணமாக ஏற்பட்ட துர்நாற்றம் போன்ற பிரச்சனைகளை தீர்க்க கோரிய பொதுமக்கள், மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரனை நேரில் சந்திக்க 2 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்தனர். தொழிற்சாலைகளிலிருந்து வரும் புகையால் மக்கள் நுரையீரல் பிரச்சனைக்குள்ளாகின்றனர் என்றும், பல முறை புகார் செய்தும் மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறினர். தி.மு.க விற்கு வாக்களித்தும், ஆதரவு தெரிவித்தும் புறக்கணிப்பு தான் கிடைத்ததாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.