கோவை: டிப்பர் லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து

கோவை, கிணத்துக்கடவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வடக்கிப்பாளையம் சாலையில் நேற்று விபத்து ஒன்று நிகழ்ந்தது. இந்த விபத்தில் இருசக்கர வாகனம் ஓட்டிச் சென்றவர் படுகாயமடைந்தார். வடக்கிப்பாளையம் சாலையில் இருந்து கிணத்துக்கடவு நோக்கி டிப்பர் லாரி ஒன்று அதிவேகமாக வந்துகொண்டிருந்தது. அதே நேரத்தில், இருசக்கர வாகனத்தில் மணிகுமாரன் (23) என்பவர் சென்றுகொண்டிருந்தார். சிங்காநல்லூர் அருகே வந்தபோது, டிப்பர் லாரி எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. விபத்தில் மணிகுமாரனின் வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. 

உடனடியாக அவரை மீட்டு பொள்ளாச்சி சுகம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து தகவல் அறிந்த கிணத்துக்கடவு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விபத்தை ஏற்படுத்திய டிப்பர் லாரி ஓட்டுநர் தலைமறைவாகிவிட்டார். அவரை காவல்துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி