கோவை புலியகுளத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞர் அஸ்வின், நேற்று முன்தினம் (ஏப்ரல் 7) ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, சுங்கம் அருகே போலீஸ் சோதனையைக் கண்டு வாகனத்தைத் திருப்பினார். அப்போது மறைந்திருந்த காவலர் ஒருவர் பிளாஸ்டிக் பைப்பால் தாக்கியதில், அவர் கீழே விழுந்து தாடை மற்றும் தலையில் காயமடைந்தார். பின்னர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 5 தையல்கள் போடப்பட்டன. இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.