கோவை: வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள பில்லூர் அணை மற்றும் அதனைச் சுற்றியுள்ள அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே பில்லூர் போலீஸ் நிலையம் அமைந்துள்ளது. இங்கு பள்ளி, தபால் நிலையம், மின்சார வாரிய அலுவலர்கள் மற்றும் பழங்குடியின மக்களின் குடியிருப்புகள் மற்றும் கடைகள் உள்ளன. 

இப்பகுதி மலைவாழ் மக்களின் பாதுகாப்பு மற்றும் நக்சல் ஊடுருவலைத் தடுக்கும் பொருட்டு போலீசார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பில்லூர் வனப்பகுதியில் இருந்து நேற்று ஒரு காட்டு யானை வெளியேறியது. இந்த யானை நேற்று (ஜூன் 11) பில்லூர் போலீஸ் நிலையத்தின் முன்பு முகாமிட்டு உலா வந்தது. 

இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். இத்தகவலின் பேரில் காரமடை வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள், காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

தொடர்புடைய செய்தி