கோவை மாவட்டம் மதுக்கரை அருகே உள்ள உப்புப் பாறை கல்லுக்குழியில் குளிக்கச் சென்ற 15 வயது சிறுவன் சிவசங்கரன் நீரில் மூழ்கி உயிரிழந்தார். நண்பர்களுடன் குளித்தபோது ஆழமான பகுதியில் பாறையைத் தொட்டு வர போட்டியிட்ட நிலையில், கரைக்கு திரும்பும்போது திடீரென மூழ்கினார். தகவலறிந்து போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தேடுதல் நடத்தினர். இரண்டாம் நாள் தேடுதலில் உடல் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.