கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதத்தில் அறுவடை செய்யப்பட்ட சுமார் 500 டன் சின்ன வெங்காயம் விற்பனை செய்ய முடியாமல் தேங்கி உள்ளது. சுமார் 400 ஏக்கரில் நடப்பட்ட வெங்காயத்திற்கு சந்தையில் உரிய விலை கிடைக்காததால், விவசாயிகள் அதை பட்டறையில் வைத்திருப்பதற்கும், மீண்டும் நடவு பணியில் ஈடுபடுவதற்கும் குழப்பத்தில் உள்ளனர். மொத்த வியாபாரிகள் குறைந்த விலைக்கு மட்டுமே வாங்க முன்வருவதும், பழைய வெங்காயம் விற்பனை ஆகாததும் விவசாயிகளை மிகுந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது.