கோவை: லாரி மோதி 5 மின்கம்பங்கள் சேதம்

கோவை, போத்தனூர்–செட்டிப்பாளையம் சாலையில் அன்புநகர் அருகே குப்பை ஏற்றிச் சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓர மின்கம்பத்தில் மோதியது. இந்த விபத்தில் 5 மின்கம்பங்கள் சேதமடைந்தன. இதனால் அன்புநகர், நபிநகர், செட்டிப்பாளையம் பிரிவு உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மக்கள் அவதிப்பட்டனர். மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக உடைந்த கம்பங்களை அகற்றி புதிய கம்பங்களை நட்டும் பணியில் ஈடுபட்டனர். இது குறித்து போத்தனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி