கோவையில் 350 கண்காணிப்பு கேமராக்கள் திறப்பு: போலீஸ் தீவிரம்

கோவை ஆர்.எஸ். புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பெண்களின் பாதுகாப்பை பலப்படுத்தவும் தனியார் நிறுவனத்தின் உதவியுடன் 350 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இக்கேமராக்கள் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ளன. அதன் செயல்பாட்டை போலீஸ் கமிஷனர் கண்ணன் தொடங்கி வைத்தார். மேலும் முக்கிய இடங்கள் மற்றும் மக்கள் கூடும் பகுதிகளிலும் கேமராக்களை இணைத்து, குற்ற தடுப்பு மற்றும் குற்றவாளிகளை விரைவில் கண்டறியும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி