நேற்று(செப்.9) மாலை சுமார் 5: 30 மணியளவில், வீட்டில் யாருமில்லாத நேரத்தில் பார்வதியின் கழுத்தில் இருந்த 10 பவுன் தாலிக்கொடியை பறித்துக்கொண்டு சஞ்சய் குமார் தப்பியோடினார். உடனடியாக தடாகம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜெயபிரகாஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. விரைவான நடவடிக்கையின் மூலம், மூன்று மணி நேரத்திற்குள் சஞ்சய் குமாரை கைது செய்து, அவரிடமிருந்து திருடப்பட்ட 10 பவுன் தாலிக்கொடியை மீட்டனர். இந்த சிறப்பான செயலுக்காக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் பெரியநாயக்கன்பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் போலீஸ் குழுவினருக்கு பாராட்டு தெரிவித்தனர்.
"இது மிரட்டல் அல்ல, ஒரு நல்வழிப்படுத்தும் முயற்சி”.. முதலமைச்சர் பேட்டி