நேற்று சொக்கலிங்கம் அங்குள்ள வாட்டர் டேங்க் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த வாலிபர் ஒருவர் அவரை வழிமறித்து மது குடிக்க பணம் தருமாறு கேட்டு மிரட்டினார். அவர் கொடுக்க மறுத்ததால் வாக்குவாதம் செய்து மிரட்டல் விடுத்தார். இதனை பார்த்த சிலர் அங்கு ஓடி வந்தனர். இதனால் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
இது குறித்து சொக்கலிங்கம் கவுண்டம்பாளையம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், மது குடிக்க பணம் கேட்டு மிரட்டியது கவுண்டம்பாளையம் மீனாட்சி அம்மன் நகரை சேர்ந்த தொழிலாளியான 28 வயதான வினோத் என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.