கோவை நிகழ்ச்சியில் சிவகுமார், சத்யராஜ் கலகலப்பான உரை

கோவையில் நேற்று தனியார் மருத்துவமனை நிகழ்ச்சியில் நடிகர் சிவக்குமார், சத்யராஜ் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். மேடையில் பேசிய சத்யராஜ், ஆரோக்கியம், யோகா, நண்பர்களுடன் நேரம் செலவிடுதல் மற்றும் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் பழக்கத்தை தொடர வேண்டும் என வலியுறுத்தினார். சிவக்குமார், தனது பள்ளிப்பருவ அனுபவங்களையும், ஓவியனாக வாழும் விருப்பத்தையும் பகிர்ந்து கொண்டார். இருவரும் வாழ்க்கை, உடற்பயிற்சி, ஆரோக்கியம், சமூக நலன் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தொடர்புடைய செய்தி