இக்கருத்தரங்கம், இந்திய ராணுவ துறையின் தளவாடங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் கூட்டமைப்பு, இந்திய தொழில் கூட்டமைப்பு, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கலகம், மற்றும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக்கழகம் இணைந்து குமரகுரு கல்லூரியில் நடைபெற்றது, இக்கருத்தரங்கின் அடிப்படை நோக்கமாக, தமிழகத்தின் மேற்கு மாவட்டமான கோவையை சுற்றியுள்ள தொழில் நிறுவனங்கள், பாதுகாப்புத் துறைசார்ந்த நிறுவனங்களில் தளவாடங்களை உற்பத்தி செய்யும் பல்வேறு வாய்ப்புகளை அறிந்துகொண்டு, இந்த வாய்ப்பை பயன்படுத்தி இராணுவ தளவாடங்களின் உற்பத்தியை துவங்க வேண்டும். அது மட்டுமல்லாது, இந்நிறுவனங்கள், ராணுவ துறைகள் மற்றும் வான்வழித்துறை சார்ந்த தளவாடங்களின் உற்பத்தி செய்யும் பெரும் நிறுவனங்களைப் பற்றி தெரிந்து கொள்ள ஒரு அரிய வாய்ப்பாக அமைந்துள்ளது. இம்முயற்சியின் பயனாக, தமிழ்நாடு பாதுகாப்பு தொழில்துறை வழித்தடமானது, ராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்வதில் இந்தியாவுக்கே முன்மாதிரியாக திகழ வாய்ப்பு அமையும். இக்கருத்தரங்கில் சிறப்புசெயலர் கிருஷ்ணமூர்த்தி, மற்றும் திட்ட இயக்குனர் ஹன்ஸ்ராஜ் வர்மா, தலைவர், ராஜேஷ், மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி என பலரும் கலந்து கொண்டனர், என்பது குறிப்பிடத்தக்கது.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி