கோவை: வாடகை வீட்டில் விபசாரம்; 4 பெண்கள் உட்பட 7 பேர் கைது

கோவை அடுத்த கோவில்மேடு பகுதியில் கவுண்டம்பாளையத்தை சேர்ந்த 30 வயது வாலிபர் ஒருவர் நேற்று முன்தினம் நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த பெண் ஒருவர் அவரை விபசாரத்திற்கு அழைத்தார். இது குறித்து அந்த வாலிபர் கவுண்டம்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதனையடுத்து போலீசார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது கோவில்மேடு மஞ்சேஸ்வரி காலனியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்தியது தெரியவந்தது. தொடர்ந்து விபசார புரோக்கர்கள் கோவில்மேடு மஞ்சேஸ்வரி காலனியை சேர்ந்த ரஞ்சித்குமார்(35), ரத்தினபுரியை சேர்ந்த கோபிநாத்(29), ராகேஷ்(20), மற்றும் விபசாரத்தில் ஈடுபட்ட 4 இளம்பெண்களை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி