கோவை மாவட்டம் முழுவதும் உள்ள பாஸ்போர்ட் அலுவலகங்களுக்கு விஷவாயு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் நேற்று (மார்ச் 3) வந்துள்ளது. இதையடுத்து பொள்ளாச்சி தலைமை தபால் நிலையக் கட்டிடத்தில் செயல்படும் பாஸ்போர்ட் கிளை அலுவலகத்தில் கிழக்கு காவல்நிலைய போலீசார் தீவிர சோதனை நடத்தினர். வெடிகுண்டு தடுப்பு பிரிவினரும் சோதனைக்கு தயாராக இருந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது, பின்னர் வெடிகுண்டு மிரட்டல் போலி என தெரியவந்தது.