இன்று(டிச.3) காலை மீண்டும் வெங்கடேஷை பிடிக்க வனத்துறையினர் கண்டியூர் பகுதிக்குச் சென்றனர். அப்போது, வெங்கடேஷ் வனத்துறையினரை மிரட்டியதுடன், தனது நண்பர் கருப்பசாமியை அழைத்து வந்துள்ளார். இருவரும் சேர்ந்து வனத்துறையினரை மிரட்டி, கற்களால் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், வனத்துறையினர் சென்ற வாகனத்தை கற்களால் தாக்கி சேதப்படுத்திவிட்டு, வெங்கடேஷும் கருப்பசாமியும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து வனத்துறையினர் காரமடை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தப்பி ஓடிய நபர்களைத் தேடி வருகின்றனர்.