தமிழக அரசு கோவை மற்றும் மதுரைக்கு மெட்ரோ ரயில் சேவைக்கான திட்ட அறிக்கையை தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்பி வைத்திருந்தது. ஆனால், 20 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களுக்கு மட்டுமே மெட்ரோ திட்டம் கொண்டு வரப்படும் என்ற விதியின் கீழ் மத்திய அரசு இந்த திட்ட அறிக்கையை திருப்பி அனுப்பி நிராகரித்துள்ளது.