மேலும், கட்டிட அனுமதிக்கு ரூ. 50,000 லஞ்சம் கேட்பதாகவும், குப்பைகளை முறையாக அப்புறப்படுத்தாமல் நகரை குப்பைமேடாக மாற்றுவதாகவும் புகார் தெரிவித்தனர். இந்த குற்றச்சாட்டுகளை வலியுறுத்தி, நகராட்சி அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அங்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து, பொதுமக்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு கலைந்து சென்றனர். எனினும், இதேபோன்று ஊழல் சம்பவங்கள் தொடர்ந்தால், மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என பொதுமக்கள் எச்சரித்துள்ளனர்.
20 ஆண்டுகளாக வாலிபரின் வயிற்றுக்குள் இருந்த தெர்மோமீட்டர் அகற்றம்