தேவையான மருந்துகள் மற்றும் மாத்திரைகளும் வழங்கப்பட்டன. மாமன்ற உறுப்பினர்கள் கற்பகம் இராஜசேகரன், புஷ்பமணி அருள்குமார், சித்ரா தங்கவேலு மற்றும் சாந்தாமணி பச்சைமுத்து ஆகியோர் முன்னிலையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. மாநகராட்சி வடக்கு மண்டல உதவி ஆணையாளர் ஸ்ரீதேவி, மண்டல சுகாதார ஆய்வாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
தனியார் மருத்துவமனைகளின் மருத்துவர்கள், அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இந்த முகாமில் பணியாற்றினர். நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் இதில் கலந்துகொண்டனர்.