துடியலூர் சந்தை மைதானத்துக்கு பின்புறம் உள்ள 18 கிராமங்களுக்கு சொந்தமான வரலாற்று சிறப்புமிக்க அரவான் திருக்கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் 18 நாட்கள் திருவிழா நடைபெறும். அப்போது அருகிலுள்ள மாகாளியம்மன், மங்கையம்மன், பொன்னியம்மன், விநாயகர் கோயில்களிலும் விழாக்கள் நடைபெறும். விநாயகர் கோயில் முதல் மாகாளியம்மன் கோயில் வரையிலான பாதையில் ஒரு பள்ளிவாசல் உள்ளது.
கடந்த ஒரு மாதமாக வெள்ளிக்கிழமைகளில் மதியம் 1 மணி முதல் 2 மணி வரை அந்த வழியாக யாரும் செல்லக்கூடாது என்று கூறி பள்ளிவாசல் முன்பு தொழுகை நடத்துகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசலும், சட்டம் ஒழுங்கு பிரச்னையும் ஏற்படுகிறது. பள்ளிவாசல் உள்ளே தொழுகை நடத்தினால் பிரச்னை இல்லை. ஆனால் வெளியில் தொழுகை நடத்துவதால் மற்ற மத மக்கள் அந்த வழியாக செல்ல முடியவில்லை போன்றவைகளை புகார் மனுவில் தெரிவித்துள்ளனர்.