முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 8-ஆம் ஆண்டு நினைவு நாள் நேற்று (டிசம்பர் 5) அனுசரிக்கப்பட்டது. கோவையில் உள்ள இடயதெய்வம் மாளிகையில் கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே அர்ஜுனன் தலைமையில் ஜெயலலிதாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தும், திருவுருவப் படத்துக்கு மலர்தூவியும் அதிமுக சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.