கோவை: கஞ்சா பதுக்கிய இளைஞர் கைது

சுல்தான்பேட்டை போலீசார் சித்தநாயக்கன்பாளையம் பகுதியில் ரோந்து சென்றபோது, விற்பனைக்காக சட்டவிரோதமாக கஞ்சா பதுக்கி வைத்திருந்த கண்ணன் (27) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடத்தி அவர் கோவை சிறையில் அடைக்கப்பட்டார். போதைப் பொருள் விற்பனை மற்றும் சட்ட ஒழுங்கு மீறல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் எச்சரித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி