இதை பெரும் வெற்றியாக தி.மு.க கருத முடியாது. விடுதலை சிறுத்தைகள் கட்சி என்பது குறிப்பிட்ட மாவட்டத்திற்குள் அடங்கும் கட்சியாகும், தேசிய அரசியல் குறித்து அவர்கள் பேசும் கருத்துக்களை பெரிதாக எடுத்துக்கொள்ள தேவையில்லை என்றும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிக மோசமாக உள்ளது. தினம்தோறும் பல பாலியல் வழக்குகள் பதிவாகிறது,
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்படுகிறது, இதை எல்லாம் மறைப்பதற்காகவே மத்திய அரசு மீது முதல்வர் ஸ்டாலின் வீணாக பழி சுமத்துகிறார். காவல்துறை ஏ.டி.ஜி.பி கல்பனா சீருடை தேர்வில் நடைபெற்ற முறைகேடு குறித்து கூறியதற்காக எரிக்கப்பட்டு கொலை செய்யும் முயற்சி நடந்ததாக தெரிவித்து உள்ளார். காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வருக்கு இதைவிட அவமானம் வேறு இல்லை, நான் முதல்வராக இருந்திருந்தால் பதவியை இதற்காக ராஜினாமா செய்திருப்பேன் என்றார்.