கோவை: ஆம்புலன்ஸ் மோதி பெண் பலி; ஓட்டுநர் கைது

கோவை பீளமேட்டில், உரிய ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஆம்புலன்ஸ் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதில், வீட்டு வேலைக்குச் சென்ற நீலாவதி (60) என்ற பெண் உயிரிழந்தார். தனியார் ஆம்புலன்ஸ் மோதி தூக்கி வீசப்பட்ட அவர், அரசு மருத்துவமனையில் சேர்க்கப்படும் முன்பே கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். விசாரணையில், சேலத்தைச் சேர்ந்த மதன்குமார் (23) என்பவர் வெறும் LLR வைத்துக் கொண்டு உரிய பயிற்சி இல்லாமல் அதிவேகமாக ஆம்புலன்ஸ் ஓட்டியதும், அஜாக்கிரதையாக நடந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வு காவல்துறை அவரை கைது செய்து, நேற்று (ஜூன் 11) கோவை மத்திய சிறையில் அடைத்தது.

தொடர்புடைய செய்தி