கோவை: தேவையை விட அதிக மின்சாரம் நம்மிடம் உள்ளது

கோவையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, கோடை காலத்தை பொறுத்தவரை மின் தேவையை சமாளிப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக நம்முடைய தேவையை விட கூடுதலான மின்சாரம் நம்மிடம் உள்ளது. 

எனவே கோடை காலத்தை சமாளிப்பதற்கு என்ன கூடுதல் மின்சார தேவை ஏற்படுகிறதோ, அது டெண்டர் மூலமாக பெறப்பட்டு தேவைகள் உடனுக்குடன் பூர்த்தி செய்யப்படும். மின்சார நிறுத்தம் அல்லது மின்வெட்டு என்பது எங்கும் இல்லை, ஏதாவது ஒரு இடத்தில் வெப்பம் காரணமாக பழுது ஏற்பட்டிருந்தால், அதனை இந்த அ.தி.மு.க வும், பா.ஜ.க வும் குற்றச்சாட்டாக கருதி மக்களிடம் கொண்டு போய் எப்படி சேர்க்கலாம் என்று பார்க்கின்றனர். 

மின்சார பழுது ஏற்பட்டிருந்தால் அதனை சரிசெய்வதற்கு போதிய ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். முதலமைச்சர் அறிவித்த திட்டங்கள் தமிழ்நாட்டிற்கு வரும்போது தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழகம் அமையும். 70 ஆயிரம் மெகாவாட் பிளான்ட் போடுவதற்கான திட்டங்களை மின்சார வாரியம் முன்னெடுத்துள்ளது. 2000 மெகாவாட் பேட்டரி ஸ்டோரேஜ் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

தொடர்புடைய செய்தி