கோவை: வாக்காளர் பட்டியல் திருத்தம்-ஆட்சியர் துவக்கி வைத்தார்

கோயம்புத்தூரில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்–2026 தொடர்பான விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் நேற்று துவக்கி வைத்தார். பொதுமக்களிடையே வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் இந்தப் பேரணியில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்யும் முறைகள் குறித்து விளக்க வீடியோக்கள் காண்பிக்கப்பட்டன. பொதுமக்கள் தங்களது வாக்காளர் விவரங்களை சரிபார்த்து தேவையான திருத்தங்களைச் செய்ய வேண்டும் என ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.

தொடர்புடைய செய்தி