சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், கார்த்தி (33) மற்றும் மோகன்ராஜ் ஆகிய இருவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், கார்த்திக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதால் அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மோகன்ராஜை மே 27ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். சரியான தண்டனை கிடைக்கும் வரை சிறுமியின் உடலைப் பெற மாட்டோம் என பெற்றோரும் உறவினர்களும் தெரிவித்துள்ளனர்.