கோவை மாவட்டத்தில் இன்று (ஜனவரி 11) பிராய்லர் கோழி கறி கிலோ 210 ரூபாய்க்கும், நாட்டு கோழி கறி கிலோ 600 ரூபாய்க்கும், ஆட்டிறைச்சி கிலோ 1000 முதல் 1200 ரூபாய் வரையிலும், சிறிய வஞ்சிரம் மீன் கிலோ 700 ரூபாய் முதல், மத்தி மீன் கிலோ 240 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு நுகர்வோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.