கோவை: டாஸ்மார்க் ஊழல் மூன்று வகையாக உள்ளது; எஸ்.ஆர். சேகர்

கோவை, காந்திபுரம் வி.கே.கே. மேனன் சாலையில் உள்ள பா.ஜ.க மாவட்ட அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகர் செய்தியாளர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், அரசு மீது அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளது எனவும் அது என்னவென்று பா.ஜ.க மாநில தலைவர் ஏற்கனவே தெரிவித்துவிட்டார் என தெரிவித்தார். டாஸ்மாக் ஊழல் மூன்று வகையாக உள்ளது என கூறிய அவர், போக்குவரத்து, தயாரிப்பு அளவு, தயாரிப்பு ஆலை என மூன்று விஷயங்களை பட்டியலிட்டார். மேலும் இதில் அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்டுள்ளனர் எனவும் ஊழல் கண்டுபிடிக்கப்பட்ட விஷயங்கள் அமலாக்கத்துறையால் தற்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளது என கூறினார்.

தொடர்புடைய செய்தி