கோவை: தூய்மையான ஆட்சியே இலக்கு.. ஊழலுக்கு இடமில்லை

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் முதலமைச்சர் விஜயின் நோக்கம் தூய்மையான ஆட்சியை வழங்குவதே என்றும், ஊழல் புகார்கள் உண்மையாக இருந்தால் தயக்கமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். பட்டா உள்ளிட்ட வருவாய்த்துறை சேவைகளில் குறைகள் இருந்தால் நேரடியாக தெரிவிக்கலாம் என்றும், தமிழக வெற்றி கழகம் இரண்டு ஆண்டுகளில் பணநாயகத்தை முறியடித்து ஜனநாயகத்தை வலுப்படுத்தியுள்ளதாகவும், மக்களின் ஆதரவு விஜய்க்கு இருப்பதாகவும் அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி