கோவை: நாய் கருத்தடை மையத்தை இடமாற்றம் செய்ய போராட்டம்

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாதாந்திர கூட்டத்தில், 84-வது வார்டு எஸ். டி. பி. ஐ மாமன்ற உறுப்பினர் அலிமா உசேன், உள்ளே செயல்பட்டு வரும் நாய் கருத்தடை மையத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் என கோரி நேற்று தரையில் அமர்ந்து, கையில் ரத்தக்கட்டுடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கருத்தடை செய்யப்பட்ட நாய்கள் மீண்டும் அதே பகுதியில் விடப்படுவதால், பொதுமக்கள் நாய் கடிக்கேற்ப துயரப்படும் நிலை உருவாகி இருப்பதாகவும், மையத்தை நகராட்சிப் பகுதியில் இருந்து வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி