கோவை: ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவித்தொகை; கலெக்டர் அறிவிப்பு

பெற்றோரை இழந்த குழந்தைகள் பள்ளி கல்வியில் இடைநிற்றல் ஏற்படாமல் இருக்க, அவர்களின் 18 வயது வரை மாதம் ரூ. 2, 000 உதவித்தொகை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், பள்ளி முடித்த பிறகு கல்லூரி கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சியும் வழங்கப்படும் என கலெக்டர் பவன்குமார் தெரிவித்துள்ளார். 

அதோடு இத்திட்டத்தில் பங்கெடுக்க விரும்பும் குழந்தைகள், தங்களின் வங்கிக் கணக்கு புத்தக நகலுடன் உங்களுடன் ஸ்டாலின் முகாம், கலெக்டர் அலுவலகம் அல்லது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி