கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ. 6. 64 கோடி செலவில் அமைக்கப்பட்ட ஐந்து புதிய மருத்துவக் கட்டிடங்கள் மற்றும் உயர்நிலை மருத்துவ கருவிகளை மா. சுப்பிரமணியம் திறந்து வைத்தார். மேலும், ரூ. 2. 44 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட நவீன நீராவி சலவை கூடம் மற்றும் ரூ. 1. 20 கோடி செலவில் தொடங்கப்பட்ட பன்னோக்கு பல்மருத்துவ நிலையத்தையும் அவர் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். ஒரே நாளில் ரூ. 12 கோடி மதிப்பிலான பல்வேறு சுகாதாரத் திட்டங்கள் கோவை மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளன. அரசியல் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், விஜய் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் சாதனைகளை குறிப்பிடாமல் பேசுவது அறியாமை என விமர்சித்தார். தற்போதைய முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையில் தமிழகம் உயர்கல்வித் துறையில் இந்தியாவில் முன்னிலை வகிக்கிறது என்றும் தெரிவித்தார். அங்கீகாரம் இன்றி மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் எச்சரித்தார்.