பேருந்துகள் மற்றும் இலகுரக வாகனங்கள் மதுக்கரை சந்திப்பிலிருந்து குவாரி ஆபீஸ் சாலை, குரும்பபாளையம் சாலை, மதுக்கரை மார்க்கெட் சாலை மற்றும் செட்டிபாளையம் சாலை வழியாக செல்ல வேண்டும். பாலக்காட்டில் இருந்து கோவை வரும் இலகுரக வாகனங்கள் செட்டிபாளையம் பிரிவு விறகு கடை பாலம் வழியாக ACC CEMENT FACTORY சாலை வழியாக செல்ல வேண்டும்.
கோவையில் இருந்து பாலக்காடு செல்லும் கனரக வாகனங்கள் ஆத்துப்பாலம் சந்திப்பில் இருந்து இடது புறம் திரும்பி குறிச்சி, ஈச்சனாரி சாலை வழியாக சென்று (NH 544) சேலம் - கொச்சின் சாலையில் கற்பகம் காலேஜ் சந்திப்பில் வலது புறம் திரும்பி செல்ல வேண்டும். பாலக்காட்டில் இருந்து கோவைக்கு வரும் கனரக வாகனங்கள் கற்பகம் காலேஜ் பொள்ளாச்சி சாலை சந்திப்பில் இடது புறம் திரும்பி NH 948 ல் ஈச்சனாரி, குறிச்சி சாலை வழியாக ஆத்துப்பாலம் சந்திப்புக்கு செல்ல வேண்டும். இந்த மாற்றங்கள் தற்காலிகமானவை என்றும், மேம்பாலப் பணிகள் முடிந்ததும் பழைய போக்குவரத்து முறை அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.