நிகழ்ச்சியில் பேசிய காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், கல்லூரி மாணவிகள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை பெற்றோரிடமோ தோழிகளிடமோகூட பகிர்ந்து கொள்வது இல்லை. இதனால் சில சமயங்களில் அவர்கள் விபரீதமான முடிவுகளுக்கு தள்ளப்படுகிறார்கள்.
சமூக வலைதளங்களை எப்படி பாதுகாப்புடன் பயன்படுத்த வேண்டும் என்பதை மாணவிகள் அறிந்து கொள்ள வேண்டும். இந்த திட்ட மூலம் மாணவிகள் தங்களின் பிரச்சனைகளை பகிர்ந்து கொள்ளவும் அவற்றுக்கான தீர்வுகளை பெறவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களின் பாதுகாப்பான பயன்பாடு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என ஆணையர் பாலகிருஷ்ணன் அப்போது தெரிவித்தார்.