கோவை: ரூ.10 லட்சம் பறித்த தம்பதி உட்பட மூவர் கைது

சரவணம்பட்டியைச் சேர்ந்த பெண்ணிடம் பங்குச் சந்தையில் அதிக லாபம் தருவதாகக் கூறி ஆன்லைன் மூலம் 10 லட்சம் ரூபாயை பல தவணைகளாகப் பணம் பெற்றுக்கொண்டு, லாபத்தையும் முதலீட்டுத் தொகையையும் திருப்பித் தராமல் மூன்று பேர் ஏமாற்றியுள்ளனர். புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், இதே குழு பல இடங்களிலும் மோசடி செய்திருப்பதை கண்டுபிடித்தனர். திருவள்ளூரைச் சேர்ந்த ராஜு முகமது அனீப், அவரது மனைவி அன்னு மற்றும் ஒருவரை போலீசார் கைது செய்து, கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி