கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தசெங்கோட்டையன், எடப்பாடி பழனிச்சாமி மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் விமர்சனங்களுக்கு பதிலளித்தார். கோபி பொதுக்கூட்டத்தில் தன்னை சுயநலவாதி என விமர்சித்த எடப்பாடி குறித்து, அவர் பெரிய தலைவர் அல்ல; அவருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்தார். உதயநிதியின் கட்சி மாறவில்லை; பிரான்ச் மட்டுமே மாறியது என்ற கருத்து குறித்து, யார் வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் சொல்லட்டும்… நான் தெளிவாக உள்ளேன் என தெரிவித்தார்.